search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மீது கார் மோதல்"

    திருமங்கலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் குலதெய்வம் கோவிலுக்குச் சென்ற பெண் பலியானார்.

    பேரையூர்:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கண்மணி (வயது 38). பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு இவர் தனது உறவினர்களான காளியம்மாள் (50), சொர்ணலதா, வள்ளியப்பன், செந்தில்வேல், சேகர் ஆகியோருடன் நெல்லை மாவட்டம், களக்காட்டில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட காரில் புறப்பட்டார்.

    கார் இன்று அதிகாலை திருமங்கலம் அருகே சமத்துவபுரம் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. காருக்கு முன்னால் சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி சென்றது.

    லாரியை டிரைவர் திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தினார். லாரி மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் காரை நிறுத்த முயன்றார். அவரது முயற்சிக்கு பலன் இல்லை.

    லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்த கண்மணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காஞ்சீபுரம்:

    சென்னை மண்ணடி கோதல் மெர்சாட் தெருவை சேர்ந்த ஜாவித், பைசல், ரைஸ் ஆகியோர் தங்களது உறவினர்கள் 6 பேருடன் இன்று அதிகாலை காரில் ஏலகிரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காரை பைசல் ஓட்டிச் சென்றார்.

    சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அருகே சின்னப்பன்சத்திரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதனால் கார் தறிகெட்டு ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி மறுபுறம் பாய்ந்து சென்றது.

    அப்போது எதிரே வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த பைசல், ஜாவித், ரைஸ் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ஆசிப், யாகூப், இம்தியாஸ், முகமது யாசிப், இன்ஷார் இர்பான், இன்ஷா ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த 6 வாலிபர்களையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஓசூர் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வேப்பனஹள்ளி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆஸ்டீன் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது உறவினர் வசந்தகுமார். இவர்கள் 2 பேரும் தங்களது, உறவினர்களான மேரிவைலட்(65), டாரஸ் (48), ஏஞ்சல் (18), அனிதா (18) உள்பட 9 பேருடன் இன்று காலை பெங்களூருவில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு பிரார்த்தனை முடித்து விட்டு பின்னர் மீண்டும் வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்டனர். அப்போது காரை வசந்தகுமார் ஓட்டி சென்றார். காரை நாகமங்கலத்தில் இருந்து கெலமங்கலம் வழியாக செல்லாமல் சூளகிரி வழியாக தவறுதலாக சென்று விட்டனர்.

    சூளகிரி அருகே கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது அந்த பகுதியில் உள்ள ஒரு யு வடிவ வளைவில் ஒசூரில் இருந்து ஒரு லாரி திரும்பியது.

    இதனை சற்று எதிர்பாராத வசந்தகுமார் காரை வேகமாக சென்று லாரி நடுவில் மோதி விட்டார்.

    இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த மேரி வைலட், அனிதா, ஏஞ்சல் ஆகிய 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் டாரஸ், ராஜன், காரை ஓட்டி வந்த வசந்தகுமார், அவரது 6 மாத ஆண் குழந்தை உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் சூளகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் டாரஸ் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 5 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    திண்டிவனம்:

    சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). இவர் சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    அந்த நிறுவனத்தில் ஜான்சாமுவேல் (29) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையை முன்னிட்டு இவர்கள் 2 பேரும் குடும்பத்துடன் ஊட்டி செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி விஜயகுமார், அவரது மனைவி சபரி (25), 8 மாத பெண் குழந்தை நானி மற்றும் விஜயகுமாரின் அத்தை ராமலட்சுமி (45), ஜான்சாமுவேல், அவரது மனைவி வின்சி (24) ஆகிய 6 பேரும் சென்னையில் இருந்து ஒரு காரில் ஊட்டிக்கு புறப்பட்டனர்.

    அங்கு அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னைக்கு அதே காரில் புறப்பட்டனர். காரை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அருண் (24) என்பவர் ஓட்டி வந்தார்.

    அந்த கார் இன்று அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    ஜான்சாமுவேல், வின்சி, 8 மாத குழந்தை நானி, கார் டிரைவர் அருண் ஆகிய 4 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் நட ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய 10 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். #ChhattisgarhAccident
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் ராஜநந்த்கான் மாவட்டம், டோங்கர்கர் நகரில் உள்ள புகழ்பெற்ற பம்லேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொகுசு காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    ராஜநந்த்கான்-துர்க் சாலையில் சோம்னி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது.

    காருக்குள் இருந்த 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர். #ChhattisgarhAccident
    திருவெண்ணைநல்லூர் அருகே நள்ளிரவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    பெரம்பலூரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). வியாபாரி. கட்டிட வேலைகளும் செய்து வந்தார். இவரது மனைவி ராணி (50), மகன்கள் சத்யபிரகாஷ் (27), மதியழகன் (23), சத்யபிரகாசின் மனைவி பிரபா (21), உறவினர் காந்தி (54). இவர்கள் அனைவரும் பெரம்பலூரில் இருந்து கார் மூலம் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

    பின்னர் அவர்கள் அதே காரில் சென்னையில் இருந்து பெரம்பலூர் புறப்பட்டனர். அந்த காரை காந்தி ஓட்டி வந்தார். அவர்கள் வந்த கார் நேற்று இரவு 11.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தாநங்கூர் அய்யனார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது காந்தியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரின் பயணம் செய்த நடராஜன், காந்தி, சத்யபிரகாஷ், மதியழகன், பிரபா, ராணி ஆகிய 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த நடராஜன் உள்பட 6 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நடராஜன் பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அரக்கோணம் அருகே லாரி மீது கார் மோதியதில் தந்தை, மகள் இறந்தனர். ஆம்பூர் அருகே கார் மோதி பெண் பலியானார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை ஈசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). இவர், பெங்களூரில் தங்கி வியாபாரம் செய்து வந்தார். செல்வராஜிக்கு புஷ்பா (42) என்ற மனைவியும், ரித்திகா (11) என்ற மகளும் இருந்தனர். நேற்றிரவு, சொந்த ஊரான ஈசலாபுரத்திற்கு செல்வராஜ் தனது மனைவி, மகள் மற்றும் நண்பர்கள் 2 பேருடன் காரில் புறப்பட்டார்.

    நள்ளிரவு 1 மணியளவில் சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் உள்ள கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின் பக்கத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முகப்பு பகுதி நொறுங்கி சேதமடைந்தது.

    செல்வராஜ், அவரது மகள் உள்பட 5 பேரும் பலத்தகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜூம், ரித்திகாவும் இறந்தனர். மற்ற 3 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து, கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே மின்னூர் எம்.சி. ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மல்லிகா (வயது 50). இவர், பெட்ரோல் பங்க்கில் துப்புரவு வேலை செய்து வந்தார். இன்று காலை 9 மணிக்கு மல்லிகா வேலை முடிந்து தேசிய நெடுசாலையோரம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, பெங்களூரில் இருந்த வந்த கார் திடீரென மல்லிகா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையோர பள்ளத்தில் விழுந்து துடிதுடித்து பலியானார்.

    விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த சீனிவாசன் மனைவி பிரேமா (70) பலத்த காயமடைந்தார். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அவர், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உப்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பெண் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் கடலூருக்கும் சேந்தனேந்தலுக்கும் இடைப்பட்ட பகுதியில் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையிலிருந்து கீழக்கரை நோக்கி வந்த கார் லாரியின் பின்புறமாக மோதியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராமநாத புரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள அலவாய்க் கரைவாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் மனைவி சாந்தி (வயது35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சாந்தியின் தந்தை முத்து ராமலிங்கம் (70), சித்தப்பா ராமச்சந்திரன் (60), உறவினர் முனித்துரை (53) மற்றும் கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அனைவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து வழக்குப்பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×